எழுத்தாளர் பாலகுமாரன்
தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்தவுடன் நான் ரொம்ப மிஸ் பண்ணது எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் புத்தகங்கள். எத்தனையோ எழுத்தாளர்களைப் படித்திருந்தாலும், என் மனதில் இன்றும் அவரின் இடத்தை ஆக்கிரமிப்போர் எவருமில்லை. 93களில் நண்பர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டது அவரது எழுத்துக்கள். அவர் அறிமுகப்படுத்தியது 'பச்சை வயல் மனது' என்னும் நாவல். (அவரது எல்லா நாவல்களையும் ஒன்னொன்னா படிக்கும் போதுதான் தெரிந்தது, 'தென்னம்பாளை' என்னும் நாவலை நான் பள்ளியில் படிக்கும் போதே படித்திருக்கிறேன் என்று. அப்பொழுதெல்லாம் யார் எழுதுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பதில்லை. சுவராசியமான ஒரு புத்தகம். அவ்வளவே.)
அந்த நண்பரிடம் அறிமுகம் வாங்கி, அவர் உறுப்பினராயிருந்த வாடகை நூல் நிலையத்திலேயே நானும் உறுப்பினரானேன். அந்த நூல் நிலையத்தாரும் பாலகுமாரனின் ரசிகராயிருந்திருக்க வேண்டும், பாலகுமாரனின் எல்லா நாவல்களும் அழகாக பைண்ட் செய்யப்பட்டு கிடைத்தன. ஒரு எழுத்து எனக்குப் பிடித்துப் போனால், அதை பகுதி பகுதியாய் மாதக்கணக்கில் படிப்பதெல்லாம் என்னால் செய்ய முடியாது. ஒரே மூச்சு, தம் கட்டி இழுத்துவிட்டுத்தான் மறுவேலை. அந்த புத்தகம் முடிக்கும்வரை வேறெதுவும் செய்யத் தோணாது. இதனால் வாரத்தில் இரண்டு நாவல்கள் எப்படியும் முடித்து விடுவேன். அம்மா, அப்பா திட்டுவதெல்லாம், கையில் புத்தகம் இருக்கும் போது, இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவது நம்ம வழக்கம். வெறும் தரையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து, பின் சுவரில் சாய்ந்து, தலைக்கு கையை மட்டும் வைத்துக்கொண்டு படுத்து (இந்தா தலகாணி, கையை வச்சுகிட்டே எவ்வளவு நேரம்டா படிப்பே - அம்மா) மணிக்கணக்கில் படிப்பதே என் தலையாய பொழுதுபோக்கு.
ஒரு வழியாய் அந்த நூல் நிலையத்தில் உள்ள பாலகுமாரன் புத்தகங்கள் எல்லாம் படித்தாகிவிட்டது. மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை அங்கிருந்து எடுத்து படித்துக் கொண்டிருந்தாலும், எனக்கென்னமோ என் மானசீக எழுத்தாளரின் எழுத்துக்கள் இன்னமும் வராதா என்ற ஏக்கம் இருக்கும். கடைகளில் பாலகுமாரன் என்ற வார்த்தை தெரிந்துவிடக்கூடாது, உடனே அந்த புத்தகத்தை வாங்கிவிட்டுத்தான் மறுவேலை. அவரின் தொடர் ஆரம்பிக்கப்போகிறது என்று ஏதாவது சுவரொட்டியில் பார்த்தால், உடனே அந்தப் பத்திரிக்கையின் சந்தாதாரர் என்று இருந்தேன். முதல் புத்தகத்திலிருந்து இன்றுவரை வாங்கிய புத்தகங்களெல்லாம் இன்றும் பத்திரமாக என் வீட்டில் இருக்கின்றன.
வெறும் கதையாக சொல்லாமல், வாழ்க்கை அலசல்களோடு, சில தேடல்களோடு, பல குறுக்குக் கேள்விகளோடு அந்த புத்தகங்கள், அடுத்த பத்து வருடத்தில் என்னில் விதைத்தது ஏராளம். இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது அந்தப் புத்தகங்கள் மட்டும் இல்லையென்றால் இன்று நான் இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டேன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இப்பொழுது எங்கிருக்கிறார் என்று தெரியாவிட்டாலும், எனக்கு பாலகுமாரனை அறிமுகப்படுத்திய அந்த நண்பருக்கு மானசீக நன்றிகள்.
இப்படி இருந்தவனை பிடித்து இழுத்துப் போட்டுக் கொண்டது மும்பாய். எப்பவாவது அந்தேரி லோக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன புத்தகக்கடையில் அவரின் புத்தகங்கள் தென்படும். அதை விட்டால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரும்போது, வழியில் எந்த கடையில் அவரின் புத்தகங்கள் தென்பட்டாலும் வாங்கி படிக்காமல் விட்டதில்லை.
மும்பாயிலாவது அப்படி ஆனிக்கொருதடவை, அமாவசைக்கொருதடவைன்னு அவரின் எழுத்துக்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா வந்தவுடன், சுத்தம். போனமுறை ஊருக்குப் போன போது நான் வாங்கி வந்த புத்தகம், 'உடையார்'. அடுத்த தடவை பாலகுமாரன் புத்தகம் வாங்கும் அனுபவத்துக்காக காத்திருக்கிறேன். ஊருக்குப் போய், படித்த புத்தகங்களையே திரும்ப படிப்பதெல்லாம் (இன்னும் பாலகுமாரனை விடலையாடா? - அம்மா) ஒரு சுகம். பயண சுமை அனுமதித்தால், இந்த தடவை எல்லா புத்தகங்களையும் இங்கு கொண்டு வந்து விடவேண்டும்.

3 மறுமொழி:
சரவணன், நானும் பாலகுமாரனின் எழுத்துக்களை விரும்பிப் படித்திருக்கிறேன். நான் முதலில் படித்தது "இரும்பு (க் இல்லாத) குதிரைகள்" என்று நினைவு. அவருடைய எழுத்துக்கள் இப்போது எப்படி இருக்கின்றன என்று தெரியவில்லை, ஆனால் இடையில் (ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர்) சற்று அவருடைய தரத்தில் இருந்து குறைந்து போய் விட்டதாய் எண்ணியிருக்கிறேன். இது பற்றி எனது "சுனந்தாவின் கடிதங்களில்" எழுதி இருந்தேன். இன்னும் முழுமையாய் அதனை வலையேற்றவில்லை.
புத்தகம் படித்த/படிக்கிற அனுபவங்களை நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். பலராலும் இதனுடன் ஒன்றிப் போக முடியும் என்று நினைக்கிறேன். ஓரிரு வரிகளானாலும் உங்கள் அம்மாவின் பேச்சை இடையே சேர்த்திருப்பது உங்களின் இந்தக் குறிப்பிற்குப் பெரிய பலம்.
-செல்வராஜ்.
By
செல்வராஜ் (R.Selvaraj), at 6:31 AM
பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ரசித்த மற்றொரு நண்பரை அறிந்ததில் மகிழ்ச்சி செல்வராஜ். நீங்கள் சொல்வது போல் 'இரும்புக்குதிரைகளு'க்கும் இப்பொழுது வரும் அவரின் எழுத்துக்களும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆனால் எனக்கு இன்னும் மெருகேறியிருப்பதாகவே தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம் 90 சதவிகிதம் ஆன்மீகமே எழுதுகிறார். வழக்கமான உபன்யாசமாக இல்லாமல் மிக வித்தியாசமான வரலாற்று அலசல்களாக அவை இருப்பது மிகச்சிறப்பு.
By
சரவணன், at 10:10 AM
அண்ணா.. வணக்கம். நானும் உங்களைப்போல பாலகுமாரனின் பரமரசிகன்.
10 வருடங்களுக்கும் மேலாக பாலகுமாரனின் படைப்புக்களைப் படித்து வருகிறேன்.
by
http://sarathecreator.blogspot.com
By
rmshankarnarayann@gmail.com, at 5:40 AM
Post a Comment
<< முகப்பு